இந்த தீபாவளிக்கு காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி செஞ்சு அசத்துங்க!!

காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ்
வகையாகும். இந்த ரெசிபி மகராஷ்டிராவில் இருந்து வந்தது. மேலும் இது
நமக் பரா என்றும் அழைக்கப்படுகிறது. இதை மாலை நேர தேநீர் வேளைக்கும்
பண்டிகை களின் போதும் அதிகமாக தயாரிப்பர்.

நல்ல காரசாரமான மாவை டைமண்ட் வடிவத்தில் செய்து எண்ணெயில் போட்டு
மொறு மொறுவென பொரித்து செய்யும் ஸ்நாக்ஸ் ஆகும். இந்த கர சங்கரா
போளியை அப்படியே மொறு மொறுப்பாக கடித்து கொண்டு கையில் சூடான டீயுடன்
ஒரு சிப் பருகி கொண்டு உங்கள் மழைக்காலத்தை கழிக்கும் போது கிடைக்கும்
சுவையே தனி தான்.

இந்த காரசாரமான மைதா பிஸ்கட்யை தயாரிப்பது எளிமையாக இருப்பதோடு
குறைந்த நேரம் மட்டுமே ஆகும். பொரிப்பதற்கு மட்டுமே கொஞ்சம் கூடுதல்
நேரம் எடுத்து கொள்ளும். மற்ற படி மிகவும் சுலபமான ரெசிபி ஆகும்.
நீங்கள் இதை வீட்டில் செய்ய நினைத்தால் பின்வரும் வீடியோ மற்றும்
செய்முறை விளக்கத்தை காணுங்கள்.

காரசாரமான மைதா பிஸ்கட் வீடியோ ரெசிபி

spicy shankarpali recipe

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 1 பெளல்

  • மைதா – 1/2 கப்

    சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு – தேவைக்கேற்ப

    எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு

    தண்ணீர் – 8 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha

படத்துடன் செய்முறை விளக்கம் : காரசாரமான மைதா பிஸ்கட் செய்வது
எப்படி

1. மைதாவை ஒரு அகலமான பெளலில் எடுத்து கொள்ளவும்

spicy shankarpali recipe

2. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து
கொள்ளவும்

spicy shankarpali recipe spicy shankarpali recipe

3. பிறகு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 6 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

spicy shankarpali recipe

4. சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்

spicy shankarpali recipe spicy shankarpali recipe

5. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை மிதமான மென்மையான
பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

spicy shankarpali recipe spicy shankarpali recipe

6. இப்பொழுது 5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்

spicy shankarpali recipe

7. மாவை சரிசமமாக பிரித்து எடுத்து பந்து போல் உருண்டையாக உருட்டி
கொள்ளுங்கள்

spicy shankarpali recipe spicy shankarpali recipe

8. பூரி பலகையில் வைத்து ரொட்டி மாதிரி தேய்த்து கொள்ளவும்

spicy shankarpali recipe

9. இப்பொழுது ரொட்டியை செங்குத்தாக கோடுகளாக வெட்டவும். பிறகு
சரிவாக வெட்டி டைமண்ட் வடிவ சிறிய துண்டுகளை பெறவும்.

spicy shankarpali recipe spicy shankarpali recipe

10. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடுபடுத்த
வேண்டும்.

spicy shankarpali recipe

11. இப்பொழுது ஒவ்வொரு டைமண்ட்டாக ஒன்றன்பின் ஒன்றாக போட்டு
பொரிக்க வேண்டும்

spicy shankarpali recipe

12. மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்

spicy shankarpali recipe

13. பிறகு 5 நிமிடங்கள் ஆற வைத்து பரிமாறவும்

spicy shankarpali recipe


Tagged in:

Related articles

Leave a Reply