இந்த நவராத்திரிக்கு ஆலு பன்னீர் கோஃப்தா எப்படி செய்வது? இதோ சூப்பர் ரெசிபி!!

ஆலு பன்னீர் கோஃப்தா என்பது வட இந்தியர்களால் விரும்பி
சாப்பிடப்படும் ஸ்நாக்ஸ் ஆகும். இதை உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர்
வைத்து தயாரிப்பர். இந்த ஸ்நாக்ஸ்யை பண்டிகை, சுப நிகழ்ச்சிகள்
மற்றும் பார்ட்டி போன்ற விழாக்களில் உண்டு மகிழ்வர். உங்கள் தேநீர்
வேளைக்கு இது மிகச் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக அமையும். இதில் முக்கியமான
விஷயம் என்னவென்றால் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல்
இருப்பதால் இதை எல்லா விழாக்களிலும் பயன்படுத்தலாம். உங்களுக்கு தேவை
என்றாலும் சேர்த்து கொள்ளலாம்.

பன்னீர் கோஃப்தா நீளமான வடிவில் பன்னீர் கொண்டும் உருளைக்கிழங்கு
கொண்டும் செய்யப்படுகிறது. இதனுடன் காரசாரமான நறுமணம் மிக்க மசாலா
பொருட்களும் சேர்த்து அப்படியே மக்காச்சோளம் மாவில் பிரட்டி
பொரிக்கப்படுகிறது. இந்த ஸ்நாக்ஸ்யை சாஸ் அல்லது சட்னி யுடன் தொட்டு
சாப்பிடலாம். புதினா சட்னி இதற்கு செம டேஸ்ட்டான ஒன்னாக
இருக்கும்.

சரி வாங்க இப்போ இந்த மொறு மொறுப்பான காரசாரமான ஆலு பன்னீர்
கோஃப்தா ரெசிபி செய்வது எப்படி என்று செய்முறை விளக்க படத்துடனும்
வீடியோ மூலமும் காணலாம்.

ஆலு பன்னீர் கோஃப்தா வீடியோ ரெசிபி

aloo paneer kofta recipe

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 6 கோஃப்தா

 • வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து) – 2

  பன்னீர் – 100 கிராம்

  படிக உப்பு (ராக் சால்ட்) – 2 டேபிள் ஸ்பூன்

  பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

  அரைத்த கருப்பு மிளகு தூள் – 2

  மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

  பச்சை மிளகாய் (நறுக்கியது) – 1 டேபிள் ஸ்பூன்

  கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) – 1 டேபிள் ஸ்பூன்

  மக்காச்சோளம் மாவு – 2 டேபிள் ஸ்பூன் (பிரட்டுவதற்கு)

  உலர்ந்த பழங்கள் கலவை (பாதாம், முந்திரி சேர்ந்தது நறுக்கியது) –
  1/4 கப்

  எண்ணெய் – பொரிப்பதற்கு

Red Rice Kanda Poha

 • 1. முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து
  கொள்ளவும்

  2. அதனுடன் பன்னீர் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து
  கொள்ளவும்.

  3. இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் பால் பவுடர் சேர்க்கவும்

  4. பிறகு நுனிக்கிய மிளகு பொடி மற்றும் மிளகாய் தூள்
  போன்றவற்றையும் சேர்க்கவும்

  5. அப்புறம் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை
  சேர்க்க வேண்டும்.

  6. கொஞ்சம் மக்காச்சோளம் மாவையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  7. மாவை சரிசமமாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளங்கைகளால் நீள
  வடிவில் உருட்டவும்.

  8. உங்கள் கைவிரலால் உருண்டையின் நடுப்பகுதியில் அழுத்தவும்.

  9. அதன் நடுப்பகுதியில் ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த பழங்களை
  சேர்க்கவும்

  10. நன்றாக மூடி விட்டு எல்லா பக்கத்தையும் நன்றாக மூடி நீள்வட்ட
  வடிவில் உருட்டவும்.

  11. ஒரு தட்டில் மக்காச்சோளம் மாவை பரப்பிக் கொள்ளவும்.

  12. இப்பொழுது உருட்டய கோஃப்தா க்களை மக்காச்சோளம் மாவில் நன்றாக
  பிரட்டி எடுக்க வேண்டும்.

  13. இதை முடித்த பிறகு கோஃப்தாக்களை அரை மணி நேரம் பிரிட்ஜில்
  வைக்க வேண்டும்.

  14. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த
  வேண்டும்.

  15. ஒவ்வொரு கோஃப்தாக்களாக எண்ணெய்யில் போட வேண்டும்.

  16. இரண்டு பக்கமும் நன்றாக வேகும் படி கோஃப்தாக்களை நன்றாக
  திருப்பி விட வேண்டும்

  17. பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அதை
  எண்ணெய்யிலிருந்து எடுத்து விட வேண்டும்.

  18. ஒரு தட்டில் சூடாக வைத்து பரிமாறவும்.

படிப்படியான செய்முறை விளக்கம் :ஆலு பன்னீர் கோஃப்தா ரெசிபி
செய்வது எப்படி

1. முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து
கொள்ளவும்.

aloo paneer kofta recipe

2. அதனுடன் பன்னீர் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து
கொள்ளவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

3. இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் பால் பவுடர் சேர்க்கவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

4. பிறகு நுனிக்கிய மிளகு பொடி மற்றும் மிளகாய் தூள்
போன்றவற்றையும் சேர்க்கவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

5. அப்புறம் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை
சேர்க்க வேண்டும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

6. கொஞ்சம் மக்காச்சோளம் மாவையும் சேர்த்து பிசைந்து
கொள்ளவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

7. மாவை சரிசமமாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளங்கைகளால் நீள
வடிவில் உருட்டவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

8. உங்கள் கைவிரலால் உருண்டையின் நடுப்பகுதியில் அழுத்தவும்.

aloo paneer kofta recipe

9. அதன் நடுப்பகுதியில் ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த பழங்களை
சேர்க்கவும்.

aloo paneer kofta recipe

10. நன்றாக மூடி விட்டு எல்லா பக்கத்தையும் நன்றாக மூடி நீள்வட்ட
வடிவில் உருட்டவும்.

aloo paneer kofta recipe

11. ஒரு தட்டில் மக்காச்சோளம் மாவை பரப்பிக் கொள்ளவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

12. இப்பொழுது உருட்டய கோஃப்தா க்களை மக்காச்சோளம் மாவில் நன்றாக
பிரட்டி எடுக்க வேண்டும்.

aloo paneer kofta recipe

13. இதை முடித்த பிறகு கோஃப்தாக்களை அரை மணி நேரம் பிரிட்ஜில்
வைக்க வேண்டும்.

aloo paneer kofta recipe

14. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த
வேண்டும்.

aloo paneer kofta recipe

15. ஒவ்வொரு கோஃப்தாக்களாக எண்ணெய்யில் போட வேண்டும்.

aloo paneer kofta recipe

16. இரண்டு பக்கமும் நன்றாக வேகும் படி கோஃப்தாக்களை நன்றாக
திருப்பி விட வேண்டும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

17. பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அதை
எண்ணெய்யிலிருந்து எடுத்து விட வேண்டும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

18. ஒரு தட்டில் சூடாக வைத்து பரிமாறவும்.

aloo paneer kofta recipe aloo paneer kofta recipe

Tagged in:

Related articles

Leave a Reply