சில நிமிடங்களில் அசத்தும் வகையில் செய்யக் கூடிய குஜராத்தி பேசன் காண்ட்வி

பேசன் காண்வி மிகவும் பிரபலமான குஜராத்தி ரெசிபி ஆகும். இது மிகவும் சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் ஆகும். இது எளிதில் எல்லாருக்கும் பிடிக்கக் கூடிய ஸ்நாக்ஸ்ம் ஆகும். ஏனெனில் இது பார்ப்பதற்கு அழகாகவும் மெதுவாகவும் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதை செய்வதற்கு கடலை மாவு மற்றும் தயிர் இருந்தால் போதும். இதை ஈஸியாக வீட்டிலே செய்து அசத்தலாம். செலவு மற்றும் நேரம் குறைந்த ஸ்நாக்ஸ் என்பதால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதற்கு சைடிஸ் ஆக புதினா கொத்தமல்லி சட்னி அல்லது கெட்ச்அப் சுவையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் உங்கள் மாலை நேர தேநீர் வேளைக்கு அருமையானது. என்னங்க இப்பவே சாப்பிடும் போல தோனுகிறதா? சரி வாங்க முதல்ல இத எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 30-35 நிமிடங்கள்

மொத்த நேரம் : 45 நிமிடங்கள்

ரெசிபி வகை : குஜராத்தி ஸ்நாக்ஸ்

பரிமாறும் எண்ணிக்கை : 4 பேர்

தேவையான பொருட்கள் :

  • கடலை மாவு-1 கப்
  • தயிர் – 1/2 கிலோ கிராம்
  • தண்ணீர் – 1 கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • ஆயில் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 5-6
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
1.

தயிரை ஒரு பெளலில் ஊற்றி நன்றாக கலக்கியை பயன்படுத்தி க்ரீம் மாதிரி அடித்துக் கொள்ளவும்.

2.

இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

3.

பிறகு இதில் கடலைமாவு சேர்த்து கலந்து மென்மையான பேட்டர் தயாரிக்கவும்.

4.

வாணலியில் கடாயை வைத்து மிதமான தீயில் இந்த பேட்டர் மாவை கலக்க வேண்டும். இதை கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவானது கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.

5.

பிறகு ஒரு தட்டின் பின்புறத்தில் எண்ணெய் விட்டு அதில் இந்த மாவு பேஸ்ட்டை தட்டையான கரண்டி கொண்டு பரப்ப வேண்டும்.

6.

5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.

7.

பிறகு ஒரு கத்தியால் 2 inch அளவிற்கு நேர் நேராக வெட்ட வேண்டும்.

8.

இதன் மேல் துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகளை பரப்பி விட வேண்டும்.

9.

இப்பொழுது ஒவ்வொரு வெட்டின பகுதியையும் தனித்தனியாக வெடிப்பில்லாமல் ரோல் செய்ய வேண்டும். இது தான் ஹான்வி.

10.

ஒரு வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட வேண்டும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை அப்படியே கான்வி மேல் ஊற்றி விட வேண்டும்.

கடைசியில் கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் துருவல் கொண்டு அலங்கரித்தால் சுவையான கலர்புல்லான ஹான்வி ரெடி.

ஊட்டச்சத்து அளவுகள்


Tagged in:

Related articles

Leave a Reply