சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி

குளிர்காலத்தில் நமக்கு மொறுமொறுப்பான மற்றும் சுவை மிகுந்த உணவு தேவைப்படுகின்றது. அதுவும் குளிருக்கு இதமாக காரசாரமான சிற்றுண்டி எனில் பலருக்கு கணக்கே என்ன கண்ணே தெரியாது. அதுவும் குளிர் நிறைந்த மாலைப் பொழுதில், நீங்கள் ஒரு கப் சூடான காபி உடன் காரம் மிகுந்த ஏதாவது ஒரு சிற்றுண்டியை உண்டு பாருங்கள்.

உங்களால் உங்களின் நாவை அடக்க இயலாது. காரம் மிகுந்த மற்றும் மொறுமொறுப்பான உணவு எனில் நம்முடைய நினைவிற்கு வெங்காய பஜ்ஜிதான் நினைவிற்கு வரும்.

அதை எப்படி சுவையோடு செய்யலாம் என பார்க்கலாம். இங்கே அதை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதற்கு தேவைப்படும் பொருட்களை கொடுத்துள்ளோம். அதை படித்துப் பாருங்கள். அதோடு வீடியோ இணைப்பையும் பாருங்கள்

பறிமாறும் அளவு – 10

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்

சமையல் நேரம் – 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

• வெங்காயம் – 5 (வெட்டப்பட்டு மற்றும் அடுக்குகளாக பிரிக்கப்பட்டது)

• வறுத்தெடுக்கத் தேவையான எண்ணெய்

• சிவப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

• சுத்திகரிக்கப்பட்ட மாவு – 1½ கப்

• உலர்ந்த மற்றும் கலந்த மூலிகைகள் – 1 தேக்கரண்டி

• குடிக்கும் சோடா – 2 கப்

• உப்பு – தேவையான அளவு

• வெங்காயத் தூள் – 1 தேக்கரண்டி

• கருப்பு மிளகு – ½ தேக்கரண்டி (நசுக்கிய)

• ப்ரெட் துகள்கள் – ½ கப்

• கடுகு தூள் – ½ தேக்கரண்டி

• கார்ன்ஃப்ளேக்ஸ் – ½ கப் (நசுக்கியது)

• கொத்தமல்லித் தழை – 1 டீஸ்பூன் (நறுக்கியது)

செயல்முறை:

• வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி அதை அடுக்குகளாக பிரித்து எடுக்கவும். அதன் பின்னர் அதை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.

onion rings perfect evening snack

• பின்னர், அடுக்குகளை வெளியே எடுத்து அதை ஒரு சமையலறை துண்டில் காய வைக்க வேண்டும். வெங்காயத் துண்டுகள் காய்ந்த பின்னர் அவற்றை ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும். அதன் பின்னர் அவற்றின் மீது மாவை தூவ வேண்டும். தூவிய மாவு வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகின்றது.

• இப்போது, ஒரு பெரிய கிண்ணத்தில் மாவை எடுத்து அதனுடன் சிவப்பு மிளகாயத் தூள், உலர்ந்த மற்றும் கலந்த மூலிகைகள், வெங்காயத் தூள், கடுகு தூள், நொறுக்கப்பட்ட மிளகு, உப்பு சேர்க்கவும். அதன் பின்னர் இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.

onion rings perfect evening snack

• அதன் பின்னர் கலவையுடன் சோடாவைச் சேர்த்து மாவு பதத்திற்கு மாற்றவும். மாவின் நிலைத்தன்மையை சோதித்து பாருங்கள். அது மிகவும் கெட்டியாகவும் அல்லது தண்ணீராகவும் இருக்கக்கூடாது.

• கலவையை நன்கு கலக்கவும். கலவையில் கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

• இப்போது, ஒரு தட்டில் நொறுக்கப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ், ப்ரெட் தூள், மாற்றும் கொத்த மல்லித் தழை போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

onion rings perfect evening snack

• பின்னர், ஆழமான சட்டியில் வறுக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி சூடு படுத்தவும்.

• இப்பொழுது வெங்காயத்தை மாவில் நன்கு முக்கி எடுங்கள். மிகவும் கவனமாக வெங்காயத்தை முக்கி எடுக்கவும். மாவு வெங்காயத்தின் அனைத்து பக்கங்களிலும் நன்கு பரவி இருக்க வேண்டும்.

onion rings perfect evening snack

• இப்போது, முக்கி எடுக்கப்பட்ட வெங்காயத்தை கார்ன்ஃப்ளேக்ஸ் கலவையில் நன்கு தடவி எடுக்கவும். கார்ன்ஃப்ளேக்ஸ் கலவை வெங்காயத்தின் மீது நன்கு பதிந்திருக்க வேண்டும்.

onion rings perfect evening snack

• அதன் பின்னர், சூடான எண்ணெய்யில் வெங்காயத்தை நன்கு பொரித்து எடுக்கவும். வெங்காயம் நல்ல தங்க பழுப்பு நிறம் வரும் வரை காத்திருந்து விட்டு அதன் பின்னர் வெங்காயத்தை எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

onion rings perfect evening snack

• அதிகமான எண்ணெய் வடிந்த பின்னர் பஜ்ஜிகளை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சாஸ் அல்லது உங்களுக்கு பிடித்த சட்னி உடன் சூடாக பரிமாறவும்.


Tagged in:

Related articles

Leave a Reply