நிப்பட்டு ரெசிபி : ருசியான தட்டுவடை ரெசிபி வீட்டில் எளிதாக செய்யும் முறை!!

நிப்பட்டு தென்னிந்திய மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ் ஆகும். இதை
அவர்கள் பண்டிகைகளின் போது செய்து சுவைப்பார்கள். அதிலும் தீபாவளி
அன்றைக்கு செய்யும் முக்கிய ரெசிபியாக தட்டை உள்ளது. தமிழ்நாட்டில்
இந்த தட்டை மிகவும் புகழ் பெற்று எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும்
செய்து மகிழ்வர். ஆந்திர மாநிலத்தில் இந்த நிப்பட்டை செக்கலு என்று
கூறிகின்றனர்.

எல்லா திருமண மறுவீட்டு பலகாரங்களிலும் இந்த தட்டையை செய்து
மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நிப்பட்டு காரசாரமான மசாலா
பொருட்களுடன் அரிசி மாவை வைத்து எண்ணெய்யில் பொரித்து செய்யப்படும்
ரெசிபி ஆகும். இது பதப்படாமல் இருக்க காற்று புகாத டப்பாக்களில்
அடைத்து வைத்து கொள்வது நல்லது. மாதக் கணக்கில் கூட கெடாமல் அப்படியே
இருக்கும். எப்பொழுது எல்லாம் வேணுமோ அப்பொழுது நாமும் விரும்பி
சாப்பிடலாம்.

இந்த நிப்பட்டை வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம் என்பதை வீடியோ
மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

நிப்பட்டு வீடியோ ரெசிபி

nippattu recipe

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 12-14 தட்டைகள்

 • உடைத்த பொரிகடலை – 1/2 கப்

  நிலக்கடலை – 1/2 கப்

  அரிசி மாவு – 3/4 பங்கு பெளல்

  ரவை – 2 டேபிள் ஸ்பூன்

  மைதா – 1 டேபிள் ஸ்பூன்

  சிவப்பு மிளகாய் தூள் – 11/2 டேபிள் ஸ்பூன்

  உப்பு – 3/4 டேபிள் ஸ்பூன்

  பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன்

  எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு +தடவுவதற்கு

  தண்ணீர் – 11/2 கப்

Red Rice Kanda Poha

படத்துடன் செய்முறை விளக்கம் : நிப்பட்டு செய்வது எப்படி

1. 1/2 கப் உடைத்த பொரிகடலையை மிக்ஸி சாரில் எடுத்து கொள்ளவும்

nippattu recipe

2. அதனுடன் 1/2 கப் நிலக்கடலையை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து
கொள்ளவும்

nippattu recipe nippattu recipe

3. அரிசி மாவை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

nippattu recipe

4. அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ரவை மற்றும் 1டேபிள் ஸ்பூன் மைதா மாவை
சேர்க்க வேண்டும்

nippattu recipe nippattu recipe

5. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு
சேர்க்கவும்

nippattu recipe nippattu recipe

6. பிறகு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

nippattu recipe nippattu recipe

7. இந்த மாவு கலவையுடன் அரைத்த பொரிகடலை கலவையையும் நன்றாக கலந்து
கொள்ளவும்

nippattu recipe

8. அடுப்பில் ஒரு சின்ன கடாயை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்ற வேண்டும்

nippattu recipe

9. எண்ணெய்யை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்

nippattu recipe

10. சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாக
கிளறிக் கொள்ளவும்

nippattu recipe nippattu recipe

11. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக நடுத்தரமான மென்மை
பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

nippattu recipe nippattu recipe

12. ஒரு பிளாஸ்டிக் சீட்டை எடுத்து அதன் மேல் எண்ணெய்யை நன்றாக
தடவிக் கொள்ள வேண்டும்

nippattu recipe

13. பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து பிளாஸ்டிக் சீட்டில் வைத்து
நன்றாக வட்ட வடிவில் தட்டையாக தட்டிக் கொள்ளவும்

nippattu recipe nippattu recipe

14. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு சூடுபடுத்த
வேண்டும்

nippattu recipe

15. தட்டிய வட்ட வடிவ மாவை கவனமாக மெதுவாக பிளாஸ்டிக்
சீட்டிலிருந்து எடுத்து எண்ணெயில் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரித்து
எடுக்கவும்.

nippattu recipe nippattu recipe

16. ஒரு நிமிடம் பொரிய வைத்து அப்படியே திருப்பி போட்டு மறுபக்கம்
பொரிக்க வேண்டும்

nippattu recipe nippattu recipe

17. பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்

nippattu recipe

18. பிறகு எண்ணெய்யை நன்றாக வடிகட்டி விட்டு கடாயில் இருந்து
எடுத்து மிதமான சூட்டில் பரிமாறவும்

nippattu recipe nippattu recipe


Tagged in:

Related articles

Leave a Reply