பிள்ளையார்பட்டி மோதகம்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாக படையல் செய்து படைக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் பிள்ளையார்பட்டி மோதகம் செய்து படையுங்கள். இது விநாயகருக்கு மிகவும் பிடித்த ஓர் படையல். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

சரி, இப்போது அந்த பிள்ளையார்பட்டி மோதகத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து படைத்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Pillayarpatti Mothagam Recipe: Ganesh Chaturthi

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 3/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன் + சிறிது
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 மற்றும் 3/4 கப்

செய்முறை:

முதலில் பச்சரியை வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பாசிப்பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை போட்டு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து 3 நிமிடம் கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் நன்கு கரைந்து பாகு போன்று வந்ததும், அதில் மீதமுள்ள நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வறுத்து வைத்துள்ள மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றி, சற்று கெட்டியானதும் சிறிது நெய் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும்.

பின் அதில் தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

அடுத்து கையில் சிறிது நெய் தடவி அந்த மாவை சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிள்ளையார்பட்டி மோதகம் ரெடி!!!

Image Courtesy: sharmispassions


Tagged in:

Related articles

Leave a Reply