மட்டன் தோரன்

எப்போதும் சிக்கனை சாப்பிட்டால் உடல் சூடு பிடித்துவிடும். ஆகவே அவ்வப்போது மட்டனை சாப்பிட்டு வர வேண்டும். உங்களுக்கு மட்டனை ஒரே மாதிரி செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், மட்டன் தோரன் செய்து சாப்பிடுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த மட்டன் தோரனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mutton Thoran Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

தேங்காய் – 2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 3 இன்ச்
ஏலக்காய் – 4
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 5 பற்கள்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரை திறந்து, அதிடல் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு மட்டனுடன் ஒன்று சேர பிரட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து 8-10 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், மட்டன் தோரன் ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi


Tagged in:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *