மொறுமொறுப்பான… இட்லி மாவு போண்டா

Crispy And Tasty Idly Maavu Bonda Recipe

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் இட்லி மாவுடன் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் கலவை சற்று கெட்டியாக இருக்குமாறு போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதில் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இட்லி மாவு போண்டா ரெடி!!!


Tagged in:

Related articles

Leave a Reply