ராகி பால் கொழுக்கட்டை

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொழுக்கட்டை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியெனில் ராகி பால் கொழுக்கட்டையை முயற்சி செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த ராகி பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து விநாயகருக்கு படையுங்கள்.

Ragi Paal Kozhukattai Recipe

தேவையான பொருட்கள்:

பால் – 4-5 கப்
சர்க்கரை – 1 கப்
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

கொழுக்கட்டைக்கு…

ராகி மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
பால் – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி, நெய் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் ராகி உருண்டைகளை சேர்த்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 15 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.

Image Courtesy: yummytummyaarthi


Tagged in:

Related articles

Leave a Reply