வித்யாசமா சாலட் செய்யனும்னு நினைக்கிறீங்களா? அப்போ ரஷ்யன் சாலட் செஞ்சு அசத்துங்க!!

வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் இந்திய ஸ்டைலில் ரஷ்ய பாரம்பரிய முறையில்
செய்யப்படும் சாலட் உணவாகும். இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி
மட்டுமல்லாமல் வெஜிடேரியன் டயட் இருப்பவர்களுக்கும் ஒரு சமச்சீரான
உணவாக அமைகிறது. இது ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி
அப்படியே அதன் மேல் க்ரீமி யோகார்ட் சேர்த்து செய்யப்படும் சாலட்
உணவாகும்.

ரஷ்ய சாலட் மற்ற சாலட் வகைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக உள்ளது.
இதில் காய்கறிகளை பச்சையாக பயன்படுத்தாமல் அரை வேக்காடு வேக வைத்து
பயன்படுத்துகின்றனர். காய்கறிகளின் சுவையும் இனிப்பான பழங்களின்
சுவையும் க்ரீமி தயிரின் புளிப்பு சுவையுடன் அப்படியே பைன் ஆப்பிள்
கலந்து சாப்பிடும் போதும் இருக்கும் சுவையே தனி தான். கண்டிப்பாக
இதுவரை இப்படி ஒரு சாலட் ரெசிபியை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

இந்த ரஷ்யன் சாலட் ரெசிபியின் ஏராளமான ஆரோக்கியமான
ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது நன்றாக உங்கள் பசியை போக்கும்.
இதை சைடிஸ் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதை எளிதாக விரைவிலேயே எந்த
வித கஷ்டமும் இல்லாமல் செய்து விடலாம்.

நீங்கள் ஆரோக்கியமான சாலட் உணவை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால்
அதற்கு இது நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். சரி வாங்க இப்பொழுது இதை எப்படி
செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும்
காணலாம்.

ரஷ்யன் சாலட் வீடியோ ரெசிபி

russian salad recipe

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: சாலட்

Serves: 2 பேர்கள்

 • கெட்டியான தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

  மிளகு – சுவைக்கேற்ப

  பொடித்த சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

  உப்பு – தேவைக்கேற்ப

  ஆப்பிள் (நறுக்கியது) – 1/2 கப்

  மாதுளை பழ விதைகள் – 1/2 கப்

  உருளைக்கிழங்கு – 1

  தண்ணீர் – 1 கப்

  முட்டை கோஸ் (சீவியது) – 2 டேபிள் ஸ்பூன்

  வெள்ளரிக்காய்(நறுக்கியது) – 3 டேபிள் ஸ்பூன்

  அன்னாசி பழம் (நறுக்கியது) – 1/2 கப்

Red Rice Kanda Poha

படத்துடன் செய்முறை விளக்கம் :ரஷ்யன் சாலட் செய்வது எப்படி

1. பிரஷ்சர் குக்கரில் தண்ணீரை சேர்க்கவும்

russian salad recipe

2. உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் அடிக்கும் வரை வேக
வைக்கவும்

russian salad recipe russian salad recipe

3. காற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்

russian salad recipe

4. பிறகு மூடியை திறந்து வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து
கொள்ளவும்

russian salad recipe russian salad recipe

5. அதை கனசதுர வடிவத்திற்கு வெட்டி கொள்ளவும்

russian salad recipe

6. பிறகு ஒரு மீடியம் வடிவ பெளலை எடுத்து அதில் கெட்டியான தயிரை
சேர்க்கவும்

russian salad recipe

7. நுணுக்கிய மிளகு தூளை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து
கொள்ளவும்

russian salad recipe

8. அதனுடன் பொடித்த சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்

russian salad recipe russian salad recipe

9. அதனுடன் ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை சேர்க்கவும்

russian salad recipe russian salad recipe

10. பிறகு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கோஸை
சேர்க்கவும்

russian salad recipe russian salad recipe

11. அதனுடன் வெள்ளரிக்காய் மற்றும் அன்னாசிபழம் துண்டுகளையும்
சேர்த்து கலக்கவும்

russian salad recipe russian salad recipe

12. நன்றாக கலக்கவும்

russian salad recipe

13. பிறகு சுவையான கலர்புல்லான சாலட்டை எடுத்து பரிமாறவும்

russian salad recipe


Tagged in:

Related articles

Leave a Reply